இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வெற்றியை ருசிக்க ஒருவகையில் காரணமாக இருப்பவர் ரன் மெஷின் விராட் கோலி. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அதில் தனது சிறந்த பங்களிப்பு கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பேட்டிங்கில் தொடங்கி கேப்டன்ஷிப், பில்டிங் என அனைத்திலும் தனது திறமையை காட்டி வருகிறார். இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக இருந்து வருகிறார்.
இப்படி இருந்தாலும் அண்மையில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஒரே கேப்டனாக இந்திய அணியை அரையிறுதிக்கு கூட செல்ல முடியாமல் இந்திய அணி வெளியேறியது இது ஒரு மிகப்பெரிய ஒரு கஸ்டமாக போனது இதை உணர்ந்து கொண்ட விராட் கோலியும் அதன்பிறகு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நான் கேப்டன்ஷிப் செய்யமாட்டேன் என விலகினார்.
அதனை அடுத்து அந்த பதவியை ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி வழக்கமாக செயல்படுவார் என நம்பினார். இந்த நிலையில் பிசிசிஐ ஒரு நாள் போட்டியில் கோலியின் கேப்டன் பொறுப்பை தூக்கி விட்டு ரோகித் சர்மாவை கொடுத்தது தற்பொழுது விராட் கோலி டெஸ்ட் அணிக்கு மட்டுமே கேப்டனாக செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் மனக் கஷ்டத்தை கொடுத்துள்ளது இந்திய அணியில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் கோலி அணியை நல்ல முறையில் நடத்தி இறுதியில் இந்த நிலையில் ஏன் ரோகித்திடம் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதே விராட் கோலி ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விராட் கோலி சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளிவருகின்றன.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்களின் எண்ணிக்கை மட்டுமே 173 மில்லியன் நபர்களாம். இதனால் வீராட்கோலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு அல்லது விளம்பரம் ஏதாவது செய்து போட்டாலே அதற்கு மட்டும் வருமானம் மட்டுமே 6 கோடியாம்.
மேலும் விளம்பரத்திற்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வதும் குறைத்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார் விராட் கோலி விளம்பரம் மற்றும் ஐபிஎல் போட்டிகள் மூலமாகவே சேர்த்து வைத்திருக்கும் தொகை மட்டுமே 840 கோடியாம். இந்த நிலையில் விராட் கோலியின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 950 கோடி இருக்கும் என கூறப்படுகிறது