விஜயின் 67 வது படத்தை எடுக்க போவது தெலுங்கு இயக்குனரா.. விஜய்க்கு அடுத்த ஆசை வந்துடுச்சு போல.

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி கண்டு வரும் நடிகர் தளபதி விஜய் அடுத்தடுத்து திறமையுள்ள இயக்குனர்களுக்கு தனது பட வாய்ப்பை கொடுத்து வருகிறார். விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு தனது 65வது திரைப்படத்தை கொடுத்து இணைந்துள்ளார்.

முதல் கட்டமாக சென்னையில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்ததாக ஜார்ஜியா சென்று சில சூட்டிங்கில் நடைபெற்றது பிறகு சென்னை திரும்பி உள்ள  விஜய் 65 படக்குழு சென்னையில் ஒரு சில காட்சிகளை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைப்பார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. விஜயின் 66 வது  திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தயாரிப்பு நிறுவனத்தை தற்போது மறுத்து தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் படம் தயாரிக்க ரெடியாக இருக்கிறாராம் விஜய்.

அந்த நிறுவனமே வந்து விஜயிடம் வலுக்கட்டாயமாக சொல்லி உள்ளதால் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு விஜய்க்கு இருக்கும் என்பதால் அதில் ஒரு படத்தை கொடுத்து அங்கேயும் கால்தடம் பதிக்க முனைப்பு காட்டுகிறார் விஜய். அந்த வகையில் தோழா, மகரிஷி ஆகிய படங்களை இயக்கிய வம்சி பைடிபல்லி என்பவர் விஜய்யின் 67ஆவது திரைப் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.

விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது அதுவே விஜயின் 67வது திரைப்படத்தையும் தயாரிக்க வாய்ப்பு இருந்தாலும் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் விஜயின் 67 வது திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக எடுக்க உள்ளது. விஜய்க்கு ஏற்கனவே தெலுங்கில் நல்ல வரவேற்ப்பு இருப்பதால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும்அதற்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது தெலுங்கு சினிமா  பிரபாஸுக்கு எப்படி பாகுபலி சீரியஸ் அமைந்ததோ அதுபோல விஜய்க்கும் இந்த தெலுங்கு படம் நிச்சயம் ஒரு நல்ல வரவேற்ப்பை இந்திய அளவில் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது