விக்ரம் படத்தின் அட்டக்காபி தான் ஜெயிலரா.? கமல் நடித்த அதே கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினி..

jailer 3
jailer 3

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் வெளியாகி தோல்வியை பெற்ற நிலையில் தற்போது வெற்றி திரைப்படத்தினை தந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக சன் பிரேக்சஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ஜெய்லர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜெய்லர் படத்தின் கதை குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் படத்தில் அனிருத் இசையமைத்திருந்த மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் பெற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை மாலை ஜெயிலர் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். தற்பொழுது ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதாவது, ஜெய்லர் கதையும், கமலின் விக்ரம் ஸ்டோரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது மகனை வில்லன்கள் கொலை செய்து விடுவார்கள்.

அதற்காக அவர்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து கமல் பழி வாங்குவார். இவ்வாறு திரில்லராக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரஜினியின் ஜெய்லரும் கமலின் விக்ரம் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்து இருப்பதாக கூறப்படுகிறது.  அதாவது முத்துவேல் பாண்டியனான ரஜினி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அவரது மகனான அர்ஜுன் காவல்துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வர அவரது மகனை அதாவது தனது பேரனை வீட்டிலிருந்து இருந்து கவனித்துக் கொள்கிறாராம். அப்பொழுது வில்லன்களுடன் அர்ஜுனுக்கு மோதல் ஏற்பட அவரை கடத்தி செல்கின்றனர். இதனால் தனது மகனை தேடி போகும் ரஜினிக்கு வில்லன் மரவர்மன் ஒரு டாஸ்க் கொடுக்கிறார்.

அப்படி வில்லன் கொடுத்த டாஸ்கை ரஜினி முடித்துவிட்டால் அவரது மகன் அர்ஜுனை உயிரோடு விடுவதாக கூறி மிரட்டுகிறார்கள். இதனால் தனது பழைய நண்பர்களுடன் மகனை மீட்டெடுக்க வில்லன்களை அழிக்கிறார் இதுதான் ஜெய்லர் கதை என கூறப்படுகிறது.