“பீஸ்ட்” படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வருகிறதா.? நச்சின்னு சொன்ன படத்தின் நாயகி பூஜா ஹெக்டே.?

pooja-hegde
pooja-hegde

விஜய்யின் ஒவ்வொரு புதிய படத்திற்கும் புதிய ஜோடிகள் பங்கு பெறுகின்றனர் அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தென்னிந்திய திரை உலகில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே இந்த முறை களமிறக்கியது பீஸ்ட் படக்குழு.

இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க மிகப்பெரிய பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் நடந்தது அதன் பிறகு தற்போது ரஷ்யாவில் இந்த படத்தின் சூட்டிங் காட்சிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படி இருக்க இந்தப் படத்தைப் பற்றி படக்குழு அப்டேட் வெளியிடுகிறதோ இல்லையோ பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே படத்தின் ஷூட்டிங் எங்கு நடக்கிறது எப்பொழுது முடிகிறது என்ன நிலவரம் என்கின்ற எல்லாவற்றையும் அவ்வபொழுது பகிர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பூஜா ஹெக்டே தற்போது பீஸ்ட் படத்தில் தன்னுடைய போஸ்டன் இன்னும் ஒரே ஒரு ஷெடியிலில்மட்டுமே அதோடு என் போஷன் முழுவதும் முடிகிறது எனவும் கூறியுள்ளார் இவர் இவ்வாறு கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

காரணம் படத்தின் ஷூட்டிங் தொடங்கி குறைந்த நாட்களே ஆன நிலையில் இவரது காட்சிகள் முடிவு கூறுவதால் படத்தின் பாடல் மற்றும் காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் மட்டுமே இவர் வந்து போவாரா என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்து உள்ளது.