“சர்வைவர்” நிகழ்ச்சியின் ஷூட்டிங் முடிந்ததா.? வெற்றியாளர் யார் தெரியுமா.? கசிந்த தகவல்.

survivor-
survivor-

சினிமா உலகில் புது புது படங்கள் எப்படி வெளிவந்து மக்கள் கவர்ந்து இழுக்கிறதோ  அதுபோல சின்னத்திரையிலும் பல்வேறு விதமான புதிய நிகழ்ச்சிகளை தொடங்கி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றனர் அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய நிகழ்ச்சியை தொடங்கி அனைவரையும் ஈர்த்துள்ளது அர்ஜுன் தொகுத்து வழங்கும் “சர்வைவர்” நிகழ்ச்சி தான்.

தற்போது மக்களுக்கு மட்டும் ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக தற்போது இருந்து வருகிறது. இது போன்று பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு இருந்தாலும் இது புதுவிதமாக இருப்பதோடு இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்கள் கடுமையாக காட்டுக்குள் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றி பெறுவர்களே நம்பர் 1 இடத்தை பிடிப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கோயில் கார்ட் ரவுண்டில் மூலம் இரண்டு நபர்கள் கலந்து கொள்வார்கள் 90 நாட்கள் காட்டில் வசித்து கொடுக்கப்படும் டாஸ்களை வெற்றிகரமாக கையாண்டு தனது திறமையை வெளிக்காட்டி யார் முன்னே வருகிறாரோ அவருக்கு ஒரு கோடி பரிசு கிடைக்கும் இதுதான்.

இந்த நிகழ்ச்சியின் அடிப்படை இந்த நிகழ்ச்சியில் பல ஹீரோ-ஹீரோயின்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தற்பொழுது முன்னேறிக் கொண்டே செல்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் இந்த சர்வைவர் நிகழ்ச்சியும் சூட்டிங் மொத்தமும் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் சர்வர் நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியாளர் யார் என்பது குறித்தும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் மொத்த திறமையையும் காட்டி முதல் சீசனில் வெற்றி வாகை சூடி உள்ளவர் நடிகை விஜயலட்சுமி என கூறப்படுகிறது ஆனால் இது இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை ஆனால் தகவல் கசிந்துள்ளது.