“சார்பட்டா பரம்பரை” படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறதா.? பா. ரஞ்சித் அதிரடி பேச்சு.

sarpatta-paramparai
sarpatta-paramparai

ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் நல்ல வரவேற்பையும் பெற்று விட்டால் அந்த திரைப்படத்தை ஹாலிவுட்டில் அடுத்த அடுத்த பாகமாக எடுத்து ரிலீஸ் செய்வதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தைப் பார்க்கின்றனர்.

அதையே தற்போது தமிழ் சினிமாவிலும் இயக்குனர்கள் மாற்றும் தயாரிப்பாளர்கள் பலரும் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் தமிழில் இதுவரை ரஜினியின் எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகியது.

அதுபோல விக்ரமின் சாமி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சுந்தர் சி – யின் அரண்மனை போன்ற அடுத்தடுத்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அதே போலவே தான் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “சார்பட்டா பரம்பரை”.

இந்த படத்தில் பசுபதி, ஜான் விஜய், ஆர்யா, டான்சிங் ரோஸ் சபீர், கலையரசன் , john kokken போன்ற பலரும் தனது ஆதாரமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக  இருந்தனர் படமும் நல்ல வரவேற்பை பெற்றதால் பாராட்டு மழையில் நனைந்தனர் .

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாம் பாகம் வந்தால் கூட ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கொண்டாட ரெடியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இது குறித்து பேசிய இயக்குனர் பா ரஞ்சித்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன் கதையாக வைத்து படமெடுக்க யோசிக்கிறேன். 1925 – ல் ஆரம்பித்தது போல் இருக்கும் கதையை வெப் தொடராகவோ அல்லது திரைப்படமாக எடுக்கும் எண்ணம் உள்ளது என்றார்.