தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய்சேதுபதி இவர் தற்போது தமிழை தாண்டி பிற மொழிகளிலும் ஹீரோவுகம், வில்லனாகவும் நடித்து அசத்துகிறார் இதனால் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார் விஜய் சேதுபதி. இவரது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து பட வாய்ப்பை கொடுத்து வருகின்றனர்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் அந்தவகையில் தமிழில் இவர் விக்னேஷ் சிவனுடன் இரண்டாவது முறையாக இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவர் நடித்த தர்மதுரை படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகுமா என மக்கள் மற்றும் ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் தர்மதுரை இரண்டாம் பாகம் குறித்து சில அப்டேட்களை தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தர்மதுரை. இந்த திரைப்படத்தை சீனுராமசாமி வேற ஒரு லெவலில் எடுத்திருந்தார்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் அவற்றால் அவன் சந்திக்கும் சூழல் மையம் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு விஜய்சேதுபதி நடிப்பதையும் தாண்டி வாழ்ந்தார் என்று கூறவேண்டும் அந்த அளவிற்கு மிக அருமையாக இருந்தது அவரது கதாபாத்திரம். மேலும் ராதிகா சரத்குமார், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோரின் நடிப்பும் மிக சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிய வருகிறது.
தர்மதுரை முதல் பாகம் எப்படி ஒருவன் பல துயரங்களை சந்தித்து தன் வாழ்வில் முன்னேறி வருவான். அதுபோல இன்னொரு சிறப்பான கதையை சீனுராமசாமி எடுப்பார் அதுவே இரண்டாம் பாகமாக உருவாகும் என மறைமுகமாக சொல்லி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா நடிக்கவில்லை என்பது வெகு விரைவிலேயே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.