நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ஜெய்பீம் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கியிருந்தார் இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது பழங்குடி மக்களின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இவ்வாறு வெளிவந்த திரைப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் ஒரு சில சமூகத்தினர் இந்த திரைப்படத்தின் மீது விமர்சனங்களை முன் வைத்துள்ளார்கள்.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தங்களுடைய சமுதாயத்தை இழிவுபடுத்துவதாக காட்டி உள்ளீர்கள் என பிரபல கட்சி தலைவர்கள் கூட இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் விமர்சனங்களுக்கு உள்ளான காட்சிகள் இந்த திரைப்படத்தில் உடனடியாக நீக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் அது என்னுடைய நோக்கம் இல்லை என நடிகர் சூர்யா அவர்களுக்கு தகுந்த பதில் கொடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்தது அந்தவகையில் இந்த திரைப்படத்தை தயாரிக்க 22 முதல் 25 கோடி வரை செலவு செய்துள்ளார்கள் என உண்மைகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ராசா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டன் 15 லட்சம் வரை சம்பளம் வாங்கி உள்ளார். அதேபோல இந்த திரைப்படத்தில் வழக்கறிஞர் ராம்மோகன் கதாபாத்திரத்தில் நடித்த ரமேஷ் 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.
அதேபோல இந்த திரைப்படத்தில் கதாநாயகி போல தோற்றமளித்த ராஜேஷ் விஜயன் 5 லட்சம் வரை ஜெய்பீம் திரைப்படத்திற்கு சம்பளம் பெற்றுள்ளார் அதேபோல செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லிஜோமொள் ஜோஸ் 8 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.
மேலும் வெகுநாட்களாக திரைப்படத்தில் முகம் காட்டாமல் இருந்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து வாங்கிய சம்பளம் 2.5 கோடி ஆகும்.