பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு கேமராவின் விலை மட்டுமே இத்தனை லட்சமா.? அப்ப 60 கேமரா இருக்கே.. மாஸ் காட்டும் விஜய் டிவி.

மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளை எப்பொழுதும் தொலைக்காட்சிகள் அடுத்தடுத்த சீசன் எடுத்து வரும் அதையே தற்போது விஜய் டிவி பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தற்போது சீசன் சீசனாக வருடத்திற்கு கொடுத்து வருகிறது நான்கு சீசன்கள் சிறப்பாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசனை தொடங்கியுள்ளது இரண்டு வாரங்கள் முழுமையாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நமீதா மாரிமுத்து சில காரணங்களால் வெளியேறினார் நேற்றைய வாரத்தில் மலேசியா பிரபலம் நாடியா சாங் வெளியேறினார் இப்படியிருக்கையில்  இந்த வாரத்தில் எலிமினேசம் இருப்பதால் போட்டியாளர்கள் தற்போது சண்டை சச்சரவை ஆரம்பித்துள்ளனர் இது பார்ப்பவர்களுக்கு சற்று சந்தோஷத்தை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக எடுத்துக் கொடுப்பது. கேமராக்கள் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பிக்பாஸ் தனது கேமராவை வைத்துக்கொண்டு தான் யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற டயலாக்கை அப்பொழுது போட்டு காண்பித்து வருகிறது. விஜய் டிவி உண்மையில் இந்த கேமராக்களை வைத்து தான் பிக்பாஸ்  என்ற  மிகப்பெரிய நடத்தி கொடுக்கிறது. இந்த நிலையில் இந்த கேமராவின் விலை பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவின் விலை யுஎஸ்ஏ டாலரின் மதிப்பில் 8000 டாலர் ஆம்.

இந்திய மதிப்பில் இந்த ஒரு கேமராவின் விலை மட்டுமே சுமார் 6 லட்சம் என கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 60 கேமராக்கள் இருக்கின்றன அப்படி என்றால் 60 கேமராவின் விலை சுமார் 3.6 கோடி என தெரியவருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மட்டுமே சுமார் பல கோடிகளை செலவு செய்துள்ளது விஜய் டிவி இந்த கேமராவின் பெயர் சோனி  BRC – H900.

இந்த கேமராவை நாம் ரிமோட் மூலமாகவே கண்ட்ரோல் செய்யலாம் இந்த கேமராவின் எம்பி கேட்டால் எல்லோருக்கும் ஷாக் ஆகி விடுகிறார்கள் இந்த கேமராவின் மெகாபிக்சல் 2.7 தான். இந்த கேமராவை பார்ப்பதற்கு சின்னதாக தான் தெரியும் ஆனால் வெயிட் 5 கிலோ என கூறப்படுகிறது இது ஒரு மல்டி பர்சனல் கேமரா ஒரு இடத்தில் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் நாம் கவர் செய்யலாம் என கூறப்படுகிறது.

Leave a Comment