தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மோகன் ராஜா இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இந்தநிலையில் மோகன்ராஜா 2003ஆம் ஆண்டு ஜெயம் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்திலும் ஜெயம் ரவியை வைத்து இயக்கி இருந்தார் மோகன் ராஜா.
இப்படி தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்த மோகன் ராஜா சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனிஒருவன், வேலைக்காரன் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதிலும் தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான கதைக்களத்தை சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான் இவர் தற்பொழுது தென்னிந்தியாவின் பழம்பெரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்பாதர் திரைப்படங்களில் இணைந்துள்ளார். இந்த திரைப்படம் வேற எந்த திரைப்படமும் கிடையாது பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃ பர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.
இந்த நிலையில் சல்மான்கான் புதன்கிழமை படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுடன் இணைந்துள்ளார் இந்த திரைப்படத்தில் நயன்தாராவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது மோகன் ராஜா இயக்கும் இந்த திரைப்படத்தில் சல்மான்கான் முதன்முதலாக தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள காட்பாதர் திரைப்படத்தில் சல்மான்கான், அனுஷ்கா செட்டி, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.