தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக பார்க்கப்பட்டவர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தார். சினிமாவின் மீது கொண்ட காதலால் சென்னை வந்தார் முதலில் வாய்ப்பு கேட்டு வந்த இவருக்கு ஒரு வழியாக “தாவணி கனவுகள்” படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதன் பிறகு நடிகர் மயில்சாமி கமலின் அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜ், ரஜினியின் பணக்காரன், உழைப்பாளி என அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார். இதனால் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் பிறகு மயில்சாமியின் பெயர் பேசப்பட்டு வந்தது.
இப்படி ஆரம்பத்தில் காமெடியன்னாக ஓடிக்கொண்டிருந்த மயில்சாமி ஒரு கட்டத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஹீரோவுக்கு சித்தப்பா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து சென்டிமென்ட் சீனில் பின்னி பெடல் எடுத்தார் இப்படி திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு ஜாம்பவானாக திகழ்ந்த மயில்சாமி மறுபக்கம் அரசியலிலும் பல வெற்றிகளை கண்டவர்.
அதிமுக கட்சியில் பல பொறுப்புகளில் வசித்தார். மேலும் ஆதரவற்ற மற்றும் தன்னை நம்பி வரும் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்த மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மயில்சாமியின் உடலை பரிசளித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார்.
இதனை அடுத்து பல பிரபலங்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் வர முடியாதவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மயில்சாமியின் புகைபடத்தை வெளியிட்டு இரங்கலை தெரிவித்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் மறைந்த நடிகர் விவேக் அவர்கள் மயில்சாமி பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அதில் அவர் சொன்னது என்னவென்றால்..
மயில்சாமியை பற்றி நான் பாரதிராஜாவிடம் கூறி இருந்தால் அவரின் வாழ்க்கை வைத்து படமே எடுக்கலாம் என கூறி இருப்பார் அந்த அளவிற்கு வித்தியாசமான மனிதர் மயில்சாமி தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது. தனக்கு வேண்டும் என சற்று யோசிக்காமல் அனைத்தும் தந்த உதவக் கூடியவர் ஒருமுறை சுனாமியின் போது பாலிவுட் நடிகர் விவேக் ஒப்ராய் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கு உதவி செய்து வந்தார். இதை அறிந்த நடிகர் மயில்சாமி தான் கஷ்டப்பட்டு வாங்கிய தங்க சங்கிலியை நேரில் சென்று விவேக் ஓபராய் – க்கு போட்டு நன்றி கூறினார். இதுபோல ஒரு மனிதரை பார்ப்பது அரிது ஒன்று என விவேக் பேசி உள்ளார்.