சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவரைப் பார்த்ததே எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடுவார். அந்த இயக்குனரிடம் கதையை நன்கு அறிந்த பிறகுதான் படத்தில் கமிட் ஆவாரா ரஜினி.
சமீபகாலமாக ரஜினிக்கே கிராமத்து கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்த நிலையில் இதை வைத்து கிராமத்து கதையம்சம் உள்ள சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த சிவாவை தன்வசப்படுத்தி அண்ணாத்த என்ற திரைப்படத்தில் இணைந்தார்.
இந்த படத்தின் சூட்டிங் இரவுபகலாக எடுக்கப்பட்டு ஒரு வழியாக ஷூட்டிங் முடிந்தது. இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருக்கிறது.
மேலும் தீபாவளியை இந்த திரைப்படம் குறிவைத்து உள்ளது ஆனால் அதற்கு முன்பாக இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்பொழுது வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளிவரும் என எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர் ரஜினி ரசிகர்கள். இது போதாத குறைக்கு தீபாவளியை வலிமை திரைப்படமும் குறிவைத்து உள்ளதால் மீண்டும் ஒருமுறை ரஜினி அஜித் ஆகியோர்கள் மோத உள்ளனர்.
இந்த தடவை யார் ஜெயிப்பார்கள் என்பதையே ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.