இயக்குனர் பாண்டியராஜ் திரை உலகில் நல்ல நல்ல படங்களை கொடுத்திருக்கிறார் அந்த வகையில் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் என்னும் சமூக அக்கறை உள்ள ஒரு படத்தை எடுத்தார் இந்த படம் நல்ல வரவேற்பு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இருப்பினும் இந்த படம் சரியாக ஓடவில்லை என பலர் குற்றம் சாட்டினார்.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்து பாண்டியராஜ் பேசியிருக்கிறார். வெற்றி வரும்பொழுது அதை நான் எளிமையாக கடந்து விடுகிறேன் ஆனால் தோல்வி வரும் போது துவண்டு விடுகிறேன் அதிலிருந்து வெளிவர மூன்று நான்கு மாதங்கள் பிடிக்கும் தோல்வியை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆண்டவனின் அருளால் என்னுடைய படங்கள் எல்லாம் பெரிய அளவு தோற்கவில்லை..
இருப்பினும் கலக்ஷன் ரீதியாக அது முன் பின்னராக வரும்பொழுது அதை ஆராய வேண்டியிருக்கிறது என்னுடைய எல்லா கதைகளும் வெர்ஷன் 7, 8 என 12 வரை செல்லும் அதை படக் குழுவை சேர்ந்த அனைவரும் படிக்கிறார்கள் ஆனால் இறுதியில் ஏதோ ஒன்றும் மிஸ் ஆகிறது என்றால் அதற்கு ஒரு நேரம் கொடுத்து அது என்ன என்று ஆராய வேண்டும்.
எதற்கும் துணிந்தவன் படத்தை பொறுத்தவரை உண்மையில் எதற்கும் துணிந்தவன் படம் எனக்கு மிகவும் பிடித்த படம். படத்தைப் பார்த்த சூர்யா சாரும் மிகவும் சந்தோஷமடைந்தார் சூர்யா சார் நடிப்பில் வெளியான ஏழு, எட்டு படங்களில் எதற்கும் துணிந்தவன் நல்ல கலெக்ஷனை தான் பெற்று இருக்கிறது. சன் டிவியை பொருத்தவரை நீங்கள் ஏன் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்..
என்று கண்டித்துக் கொண்டார்கள் கலாநிதிமாறன் சாரும், காவியா கலாநிதி மேடமும் சரி படம் மகிழ்ச்சியே கொடுத்திருக்கிறது. அவர்கள் என்னிடம் சூர்யா சரை கூட்டி வாருங்கள் அல்லது வேறு யாரையாவது கூட்டி வாருங்கள் படம் செய்வோம் என்றார்கள் நான்கு மொழிகள் என்பதால் அதில் லாபம் கிடைத்திருக்கிறது என்று பேசினார்.