தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக தற்போது பார்க்கப்படுபவர் விஷ்ணு விஷால்.
சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்த போது பெரும்பாலும் கிராமத்து சாயலில் உள்ள படங்களில்தான் நடித்தார் அந்த திரைப்படங்கள் ஓரளவு வெற்றியை கொடுக்க தற்போது அதிலிருந்து மாறி தற்போது ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி கண்டு வருகிறார்.
ஆனால் தற்பொழுது இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பம்சம் உள்ள திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார் விஷ்ணு விஷால் இப்படியிருக்க இவரது குடும்ப விஷயம் பற்றிய தகவல்கள் சமீப காலமாக மக்கள் மத்தியில் பேசும்போது அமைந்துள்ளது இவர் முதல் மனைவி ரஜினி என்பவரைவிவாகரத்து செய்துவிட்டு தற்போது பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தனது வாழ்த்துக்களை கூறினர். இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியின் அப்பா குறித்தும் செய்திகள் வெளியாகின்றன.
ரஜினியின் அப்பா பிரபல நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் மட்டும் சின்னத்திரையில் நடிக்கிறார். இவரது பெயர் கே எஸ் நடராஜன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்.