தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது ஆனால் இதனை பற்றி மக்கள்கள் எந்த ஒரு கவலையும் இல்லாமல் இயல்பாக தான் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழக அரசு ஊரடங்கு புதுப்பித்துக் கொண்டே போகிறது மக்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.
மேலும் ஊரடங்கு காலத்தில் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிட அரசு இன்னும் உத்தரவு தரவில்லை இதனால் பல திரையரங்குகளின் உரிமையாளர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.அதுமட்டுமல்லாமல் எந்தத் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிடாததால் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தங்களது கஷ்டத்தை பற்றி சமூக வலைதளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல முன்னணி திரையரங்குகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய தேவி திரையரங்கம் பெரும் கஷ்டத்தின் காரணமாக மூட போவதாக ஒரு தகவல் சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் வெளியானது மேலும் இந்த தகவலை அறிந்த இந்தத் திரையரங்கின் உரிமையாளர் தற்பொழுது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்
அதில் நாளிதழில் வெளியான அந்த செய்தி மிகவும் தவறான செய்தி என்றும் 51 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிவரும் திரையரங்கம் இன்றும் புது புது டெக்னாலஜி மூலம் திரையிடப்பட்டு வருகிறது அதுமட்டுமல்லாமல் திரையரங்கிற்கு நாள்தோறும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்துள்ளதாகவும் திரையரங்கு நிர்வாகம் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
The news published in Dinamalar yesterday that Chennai #DeviTheater is being closed permanently is not true…
Dinamalar Fake News… pic.twitter.com/NZsCzpqe8A
— Karthik Ravivarma (@Karthikravivarm) June 2, 2021
திரையரங்கு மூடப்படுகிறது என தவறான தகவல் பிரபல நாளிதழில் வந்ததால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் உடனடியாக செய்தி வெளியிட வேண்டும் என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த திரையரங்கை மூடிவிட்டால் நாங்கள் எங்கே போவது என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.