வெள்ளித்திரையில் பிரபல நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான் இவர் தமிழில் அய்யா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துக்கொண்டார்.
இவர் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த போது அந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து இருவரும் காதலித்து தற்போது வரை வருகிறார்கள்.
மேலும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே இவர்கள் ஒன்றாக இருக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து நீங்கள் எப்பொழுது இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என ரசிகர்கள் பலரும் இவரிடம் கேட்காத கேள்விகளே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஆம் அந்த புகைப்படத்தில் நயன்தாரா கையில் மோதிரம் அணிந்த புகைப்படமாக இருக்கிறது இதை வைத்துப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா என பல கேள்விகளை சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள்.
இதோ அவர் பதிவு செய்த புகைப்படம்.