கமல் நடிப்பில் உருவாகி வரும் “விக்ரம்” படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே இத்தனை கோடிக்கு விலை போய் உள்ளதா.? மாஸ் காட்டும் ஆண்டவர்.

vikram
vikram

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் கமலஹாசன் ஒரு வழியாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் இப்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசில், விஜய்சேதுபதி, ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

நடிகர் கமல் குறும்படத்தில் ஒரு பக்கம் நடிக்க ஆரம்பித்து இருந்தாலும் மறுபக்கம் விஜய் டிவியில் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5 மற்றும் ஹாட்ஸ்டார் ஓடுதளத்தில் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் ஆனால் தற்போது கமலுக்கு இன்னும் அந்த விக்ரம் படத்தை முடித்து கொடுக்காமலேயே இருந்தார்.

ஒரு வழியாக அதை முடித்து விடு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அதன்  காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பதவியிலிருந்து விலகி உள்ளார் தற்போது படத்தை முடித்துக் கொடுக்க அவர் ரெடியாக இருக்கிறார் மற்ற நடிகர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த தகவல்களும் செமையாக இருப்பதால் ரசிகர்கள் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை ஆகியவற்றை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ளது அதேபோல் விக்ரம் திரைப்படத்தை  ஹாட்ஸ்டார் OTT தளம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் விக்ரம் திரைப்படம் 112 கோடி ரூபாய் கிட்டத்தட்ட லாபம் பார்த்து உள்ளது. விக்ரம் படத்தை எடுக்க செலவான முக்காவாசி காசை இதன் மூலமாகவே சம்பாரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இனி படம் வந்தால் லாபத்தை பார்க்க வேண்டியதுதான் என கூறப்படுகிறது.