பத்து தல திரைப்படத்தின் “வசூல்” தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமா.? நஷ்டமா.? வெளிவந்த உண்மை தகவல்

pathu-thala
pathu-thala

நடிகர் சிம்பு செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்திலிருந்து சிறந்த இயக்குனர்களிடம் கதை கேட்டு படம் பண்ணி வருகிறார் அதனால் இவருடைய படங்கள் அடுத்தடுத்து வெற்றியை பெறுகின்றன கடைசியாக கூட இவர் நடித்த வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்கள் 100 கோடி கிட்டத்தட்ட..

வசூல் செய்த நிலையில் அடுத்த ஒரு வெற்றி படத்தை கொடுக்க கிருஷ்ணா உடன் கைகோர்த்து சிம்பு நடித்த திரைப்படம் தான் பத்து தல.. இந்த படம் முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் படமாக இருந்தாலும் செண்டிமெண்ட் சீன்களும் இந்த படத்தில் அதிகம் இருந்தன அதனால் படத்திற்க்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஒரு வழியாக படம் மார்ச் 30 தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது  காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது. பத்து தல படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், அனுசித்ரா, கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன்..

மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர் தொடர்ந்து இந்த படம் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தல திரைப்படம் தயாரிப்பாளருக்கு லாபமா.. நஷ்டமா.. என பலரும் கேள்வி எழுப்பு வந்தனர் இப்படி இருக்கின்ற நிலையில் இதற்கு தெளிவான விளக்கத்தை  ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனமானத்தின் “CEO” பேசிய உள்ளது.

பத்து தல படம் வெளிவருவதற்கு முன்பாகவே எங்களுக்கு லாபத்தை பெற்றுக் கொடுத்து விட்டது என்றும் வெளிவந்த பின் ஓரளவு நல்ல லாபத்தை எட்டி உள்ளது என்றும் கூறி இருக்கிறார். இதன் மூலம்  தல திரைப்படம் மிகப்பெரிய நஷ்டம் என சொல்லி வந்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்..