டாக்டர் திரைப்படத்தில் யோகி பாபுவிடம் செம்ம அடி வாங்கிய நடிகர் மாஸ்டர் பட பிரபலமா..?

master-3
master-3

தமிழ் சினிமாவில் தற்போது நெல்சன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் டாக்டர் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமில்லாமல் கதாநாயகியாக பிரியங்கா நடித்துள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ச்சனா, யோகி பாபு, போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து உள்ளார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் வெகுநாளாக நடத்திய திரைப்பட வேட்டையில் தற்போது இத்திரைப்படம் அவருடைய பசிக்கு இறையானது போல அமைந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற செல்லம்மா செல்லம்மா மற்றும் சோ பேபி மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் அனைத்துமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு த்ரில்லர் திரைப்படமாக இருந்தாலும் யோகி பாபு மற்றும் கிங்ஸ்லி நகைச்சுவை காட்சி ரசிகர் மத்தியில் வேற லெவலில் இருந்துள்ளது.

அந்த வகையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த Bjornsurrao நடித்த காட்சிகள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது அந்தவகையில் இவர் இந்த திரைப்படத்தில் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

master-2
master-2

இந்த நடிகர் யார் தெரியுமா இவர் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் மாஸ்டர் பிளாஸ்டர் என்ற பாடலைப் பாடியவர் தான். இவ்வாறு அவர் பாடிய பாடல் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாகியது மட்டுமில்லாமல்  இன்றும் பலர் அந்த பாடலை காலர் டியூனாக வைத்துள்ளார்கள்.

இவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல் இவர் பல ஆல்பம் சாங் களை பாடியுள்ளாராம். இவ்வாறு இவர் பாடல் பாடுவது மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது, இசை அமைப்பது போன்ற பல்வேறு திறன்களை கொண்டவர்.

master-1
master-1

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகர் இந்த மாஸ்டர் படத்தை பார்த்த பிறகுதான் இந்த பாடலை நான் எழுத தொடங்கினேன். அந்த வகையில் இந்தப் பாடல் மிகவும் பிரம்மாண்டமாக இழந்தது மட்டுமல்லாமல் மாபெரும் ஹிட்டு கொடுத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.