பொதுவாக சினிமாவில் உள்ள ஏராளமான பிரபலங்கள் நடிப்பதையும் தாண்டி தொடர்ந்து ஏராளமான பிசினஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் சூரி மதுரையில் பல ஹோட்டலுக்கு உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது இப்படிப்பட்ட நிலையில் திடீரென நடிகர் சூரியின் ஹோட்டலில் வணிகவரி துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களில் நடித்து வந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியுள்ளார் இந்நிலையில் நடிகர் சூரி மதுரையில் அம்மன் என்ற உணவகங்களை நடத்தி வருகிறார்.
மேலும் மதுரையில் பல இடங்களில் அம்மன் என்ற ஹோட்டல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் திடீரென வணிகத் துறை அதிகாரிகள் அம்மன் ஹோட்டலில் சோதனை நடத்தியுள்ளார்கள். அந்த ஹோட்டலுக்கு உணவு தயாரிப்பதற்காக வாங்கும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சோதனை நடத்தி அதிகாரிகள் அம்மன் உணவகத்தில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி அதனை வணிக வரிதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்களாம். எனவே இன்று காலை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என உணவகத்தின் மேனேஜர் உள்ளிட்ட இன்னும் சிலருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்களாம்.
இப்படிப்பட்ட நிலையில் இன்று அம்மன் ஹோட்டல் மேனேஜர் இன்றைய வணிகத்துறை அதிகாரிகளிடம் ஆஜராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திடீர் என்று நடிகர் சூரியின் ஹோட்டலில் ஆய்வு செய்தது அங்கு இருக்கும் சுற்று வட்டாரங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்பொழுது நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரி முதன் முறையாக ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இந்த வருடம் இறுதியில் விடுதலை திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.