பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தற்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது தமிழ் சினிமாவில் டாப்10 நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் எந்த ஒரு பக்கபலமும் இன்றி நேரடியாக தற்பொழுது டோலியூட்டில் அறிமுகமாகியுள்ளார் இவ்வாறு இவர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வேலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளதாக பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படம் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியிட உள்ளதாக முடிவு செய்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்திற்காக டப்பிங் பேச ஆரம்பித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிவகார்த்திகேயன் அவர்கள் தெலுங்கில் சரளமாக பேச அதிக அளவு முயற்சி செய்து வருவதாகவும் இதில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக தென்படுவார் எனவும் தெரிந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு பாண்டிச்சேரி ஹைதராபாத் என மூன்று இடங்களில் அதிக அளவு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது மாவீரன் என்ற திரைப்படத்திலும் நடந்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் அஸ்வின் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜை போடப்பட்டுள்ளது.