தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கைககோர்க்கிறாரா சிவகார்த்திகேயன்.? படத்தை இயக்க போவது யார் தெரியுமா.? வெளியான சூப்பர் தகவல்.

siva-and-rashmika
siva-and-rashmika

உலகில் இருக்கின்ற ஒவ்வொரு நடிகரும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அந்த திரைப்படத்தை மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக கொடுக்க ஆசைப்படுகின்றனர் ஆனால் அது பெரும்பாலும் நிறைவேறாது ஆனால் அது ஒரு சிலர் மட்டும் படத்தின் கதையை துல்லியமாக கணித்து இது நம்முடைய கதாபாத்திரத்திற்கு செட் ஆகும் என்பதை உணர்ந்து.

அதற்கு ஏற்றார் போல நடித்து வருவதால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை தொடர்ந்து அந்த லிஸ்டில் இணைந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் பல திரைப்படங்கள் மாபெரும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளன. ஏன் கடைசியில் கூட இயக்குனர் நெல்சன் திலிப்குமார் உடைப் கைகோர்த்து பணியாற்றிய படம் “டாக்டர்”.

திரைப்படம் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வேட்டை நடத்தி புதிய சாதனை படைத்தது அந்த திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் “டான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் இந்த படத்திலும் நாயகியாக நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

டான் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வகையில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் படங்களை இயக்கி வரும்  அனுதீப் கே. வி இயக்கும் ஒரு புதிய படத்திலும் இவர் நடிக்க உள்ளார் அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வருகின்றனர். இப்படத்தில் இணைந்தால் அந்த திரைப்படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்பதை மனதில் வைத்துக்கண்டு தற்போது இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.