பிரபல விஜய் டிவியின் மூலம் பல நடிகர் நடிகைகள் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வருகிறார்கள்.அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்று பிறகு அங்கராக நீண்ட வருடங்களாக பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் இவர் பேச்சுத் திறமையைப் பார்த்து அனைவரும் வியந்தார்கள். இதன் மூலம் அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.
இதன் மூலம் தான் இவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தது. இந்த வகையில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற வாக்கியத்திற்கு உதாரணமானவர் சிவகார்த்திகேயன் என்று தான் கூற வேண்டும்.
தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பினாலும் தற்போது சினிமாவில் அசைக்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்கள். அந்தவகையில் சிவகார்த்திகேயனும் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
அவ்வபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் மனைவி மிகவும் மெதுவாக நடந்து வந்தார். அதோடு அவர் வயிறும் கொஞ்சம் குண்டாக இருந்ததால் அவர் மாசமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
எனவே இப் பகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி சிவகார்த்திகேயன் விரைவில் வர உள்ளார் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.