“ஜெயிலர்” படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்.. புகைப்படத்தை பார்த்து குழம்பும் ரசிகர்கள்

rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறு இடைவேளைக்கு பிறகு நடித்து திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் தீலிப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை எடுத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் ரஜினி ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்  இவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் பல முக்கிய இடங்களில் படம் எடுக்கப்பட்ட வருகிறது.

இருந்தாலும் அவ்வபோது ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து  புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கசிந்தது படக்குழுவுக்கு புது தலைவலியை கொடுத்தது இந்த நிலையில் ரசிகர்களுக்கு தங்களை ஒரு அப்டேட் கொடுக்குறோம் என்பது போல திடீரென ஜெயிலர் படத்திலிருந்து  glimpse வீடியோ வெளியானது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புகைப்படம் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க சிவ கார்த்திகேயன் ஆசைப்பட்டார் ஆனால் ரஜினியோ இது தன்னுடைய படம் எனக் கூறி சிவகார்த்திகேயனை நிராகரித்ததாக சில பேச்சுக்கள் அப்பொழுது வெளிவந்தன ஆனால் தற்போது ஜெயிலர் பட நடிகர் சிவ ராஜ்குமார் உடன் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா என கேட்டுள்ளார் மறுபக்கம் சிவராஜ் குமாருடன், சிவகார்த்திகேயன் இருப்பதால் ஒருவேளை மாவீரன் படத்தில் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கிறாரா என கேட்கின்றனர் இது குறித்து சரியான தகவல் வெளிவந்தாலே எதையும் உறுதிப்படுத்த முடியும் ஆனால் இந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

rajini and sivakarthikeyan
rajini and sivakarthikeyan