விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவரா.? அனல் பறக்க வெளிவந்த தளபதி 68 அப்டேட்

vijay
vijay

தளபதி விஜய் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து தனது 67 வது திரைப்படமான “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் வீடியோவை வெளியிட்டு ஷூட்டிங் ஆரம்பித்தது.

முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் சைலண்டாக முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டது அங்கு ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கின் போதும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டி விட்டது இதுவரை 60 நாள் ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்னும் 60 நாள் ஷூட்டிங் இருக்கிறது.

அதை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் எடுக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது லியோ திரைப்படம் முழுக்க முழுக்க “பாக்க ஆக்சன்” திரைப்படமாக உருவாகி வருவதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அதற்கு ஏற்றார் போல படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் விறுவிறுப்பாக நடித்து வருகின்றனர்.

இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது சென்னையில் வெகு விரைவிலேயே மூன்றாவது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை அட்லீ இயக்க உள்ளார் என கூறப்படுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன..

ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் கூறப்படவில்லை இந்த நிலையில் ஹச். வினோத் விஜய்க்கு ஒரு கதையை கூறி உள்ளதால் தளபதியை 68 படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது ஆனால் இயக்குனர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.. என்றாலும் தளபதி 68 ஹீரோயின் சமந்தா தான் என பலரும் கூறி வருகின்றனர் அப்படி நடந்தால் விஜய்யும், சமந்தாவும் நான்காவது முறையாக இணைவார்கள். ஏற்கனவே கத்தி, தெறி, மெர்சல் போன்ற மூன்று படங்களிலும் ஜோடி நடித்து வெற்றி கண்டது.