தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் அவர் சொன்ன கதை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியை கொடுக்காததால் அவரை தூக்கிவிட்டு தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனியை கமிட் செய்து உள்ளது அவரும் தற்போது ஏகே 62 படத்திற்கான கதை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறாராம்..
வெகு விரைவிலேயே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு ஷூட்டிங்கை தொடங்கும் என தெரிய வருகிறது. ak 62 சூட்டிங் போகாததற்கு சில காரணங்களும் இருக்கிறது ஒன்று அஜித்தின் அப்பா இறந்ததைஅடுத்து சில வாரங்கள் போகட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என படக்குழு யோசித்துள்ளதாம் மறுபக்கம் பிரபுதேவா நடிக்கும் படத்தில் மகிழ் திருமேனி வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த இரண்டு காரணங்களால் தான் ஏகே 62 தள்ளிப் போய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏகே 62 படத்திற்கான ஹீரோயின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது அதன்படி தென்னிந்தியா சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் பிரத் சிங் தான் அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறாராம்..
ரகுல் பிரீத் சிங் சும்மாவாகவே கிளாமரை அள்ளித் தெளிப்பார் எனவே ஏகே 62 திரைப்படத்தில் கிளாமர் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் சமீபகாலமாக அஜித் படங்களில் பெருமளவு கிளாமர் காட்சிகள் இல்லை எனவே இந்த படத்தில் ரகுல் பிரித் சிங்குக்கு பிடித்த கிளாமர் குறைந்து இருக்கும் அல்லது இல்லாமலேயே போகவும் வாய்ப்பு இருக்கிறது. இவர் AK 62 எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..