தமிழ் சினிமாவில் இப்பொழுது ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே பார்ட் 2, பார்ட் 3 எதிர்பார்க்கின்றனர் அப்படி சந்திரமுகி படத்தை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சந்திரமுகி 2 படம் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது. ஆனால் சந்திரமுகி பார்ட் 1 படம் போல இந்த படம் வெற்றி பெறவில்லை..
பார்ட் 1 திரைப்படத்தை பி. வாசு இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்திருந்தார். அவருடன் இணைந்து நயன்தாரா, வடிவேலு, நாசர், ஜோதிகா, பிரபு, விஜயகுமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 890 நாட்கள் ஓடியது.
13 வயதிலேயே முதல் பட வாய்ப்பு.! பத்தாவது படிக்கும் பொழுதே பழுத்த பழமாக இருக்கும் தமன்னாவின் வீடியோ…
அது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அள்ளி குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு ரஜினி மற்ற நடிகர், நடிகைகள் காரணமாக இருந்தாலும் முக்கிய காரணமாக ஜோதிகா தான் பார்க்கப்பட்டார் ஏனென்றால் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தார்.
இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சினேகா சந்திரமுகி முதல் பாகம் பற்றி பேசினார் அவர் சொன்னது சந்திரமுகி முதல் பாகத்தில் நான் தான் சந்திரமுகியாக நடிக்க இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் சந்திரமுகி 2 படத்தில் எப்படி கங்கனாவை கலாய்க்கிறார்களோ அதே போல நீங்க முதல் பாகத்தில் நடித்திருந்தால் உங்களையும் கலாய்த்து தள்ளி இருப்பார்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த செய்தியை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.