சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். ஜெயிலர் படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளார். இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் கதைக்கு ஏற்றபடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து பல சிறந்த நடிகர் நடிகைகளையும் பட குழு சேர்த்து உள்ளது.
அந்த வகையில் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், ராக்கி பட ஹீரோ என ஒரு பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க இருக்கிறது. நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் என தெரிய வருகிறது. பெரும்பாலும் ரஜினி இயக்குனரிடம் கதையை கேட்டு விட்டு விடுவார்.
ஆனால் இந்த தடவை இந்த படத்தின் கதையை வேற லெவலில் செதுக்க நெல்சன் ரஜினியும் பல தடவை பேசி உள்ளனர். அதனால் இந்த படத்தின் கதை வேற லெவலில் செதுக்கப்பட்டு இருப்பதாகவும் நிச்சயம் இந்த படம் ரஜினிக்கு மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் தமன்னா.
சமீப காலமாக சினிமா பக்கம் தென்படாமல் இருந்தார். இப்படி இருந்த நிலையில்தான் தற்பொழுது ஜெயிலர் பட குழு வாண்ட்டாக போய் தமன்னாவுக்கு கதையை சொல்லி தட்டி தூக்கி உள்ளதாக ஒரு பக்கம் தகவல் கசிந்து உள்ளது. அதுவும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
முதலில் ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்கப்பட குழு முயற்சி செய்தது ஆனால் அவர் கமிட்டாக முடியாது என கையை விரித்ததால் வேறு வழி இன்றி நடிகை தமன்னாவிடம் போய் பேசி உள்ளது படக்குழு. இதனை நம்ப தகுந்த சினிமா வட்டாரங்கள் மத்தியில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.