புஷ்பா 2 படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவது இவரா.? சமந்தா கிடையாதாம்..!

puspa-2
puspa-2

தெலுங்கு டாப் ஹீரோவான அல்லு அர்ஜுன் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இரண்டாவது பாகம் உடனே எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் படபிடிப்பு நடத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க காடு மலைகள் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வந்தாலும் இந்த படத்தில் ஐட்டம் டான்ஸ் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகம் கதைகளும் விறுவிறுப்பாக இருந்தாலும் நடிகை சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.

மேலும் புஷ்பா படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம் எனவே புஷ்பா 2 திரைப்படத்திலும் ஒரு ஐட்டம் டான்ஸ் இருக்க வேண்டுமென படக்குழுவும்.. கணித்து உள்ளது ஆனால் இந்த தடவை சமந்தாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க இருக்கின்றனர் அந்த நடிகை வேறு யாரும் அல்ல..

பாலிவுட் பிரபல நடிகையான மலைகா அரோரா தான் புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது சும்மாவே கிளாமர் காட்டுவார் புஷ்பா  திரைப்படத்தில் சமந்தா ஆடிய ஆட்டத்தை  ஓரம் கட்ட பாலிவுட் நடிகை மலைகா அரோரா வேற லெவலில் நடனமாடுவார் என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.