இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்யப் போகிறாரா செல்வராகவன்.? அதிர்ச்சி கிளப்பிய செய்தி

selvaraghavan

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் நன்றி கொடுத்தார். அதன் பிறகு இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான சமிபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் தோல்வி அடைந்தது. அதனை அடுத்தடுத்து திரைப்படங்களில் இயக்கி வரும் செல்வராகவன் இயக்குனராக மட்டுமல்லாமல் சினிமாவில் நடிகராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

அப்படி இவர் நடிப்பில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இந்த கதையில் உங்களைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்ற அளவிற்கு தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் இப்படி சினிமாவில் இயக்குனராகவும் கதை ஆசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்துவரும் செல்வராகவன் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

அப்படி என்ன அவர் பதிவிட்டுள்ளார் என்பது தான் ஹைலைட். அதாவது “தனியாகத்தான் தான் வந்தோம் தனியாக தான் போவோம்” நடுவில் என்ன துணை வேண்டி கிடைக்கிறது என்று பதிவிட்டு இருந்தார் இதை பார்த்த ரசிகர்கள் இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்யப் போகிறாரா என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று அது மட்டும் அல்லாமல் இவர்களுடைய திருமணம் நிலைத்து நிற்கவில்லை குறுகிய ஆண்டுகளிலே ஒரு சில பிரச்சனையின் காரணமாக இருவரும் விவாதத்தை பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு தன்னுடைய துணை இயக்குனரான கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டவுடன் ரசிகர்கள் இரண்டாவது மனைவியும் விவாதத்து செய்யப் போகிறாரா செல்வவராகவன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.