தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ். இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அப்படி இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக இருக்கிறார்.
அதில் முதலாவதாக நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு ஆக்சன், அட்வெஞ்சர் கலந்த ஒரு திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா, ஜெர்மன் நாட்டு நடிகை எல்லி அவ்ர்ராம் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் மேலும் தனுஷ் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக ஹீரோ, வில்லனாக தனுஷ் மிரட்டி இருக்கிறார். படம் தரமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தயாரித்துயுள்ள எஸ் கலைப்புலி தாணு அவர்கள் இந்த படத்தை பெருமையாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன் அண்மைக்காலமாக படங்களில் நடிக்கவும் செய்கிறார் அப்படி இவர் பீஸ்ட், சாணி காயிதம் போன்றவற்றில் இவரது நடிப்பு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் தற்போது செல்வராகவன் நானே வருவேன் படத்தை இயக்கி அதில் நடித்தும் இருக்கிறார்.
இந்த படத்தில் அவருக்கு எந்த மாதிரி எல்லாம் கதாபாத்திரம் என்பது குறித்து தற்போது நமக்கு தகவலும் கிடைத்துள்ளது நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் சோமராஜன் என்கின்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் இவரது கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பு கூறியது என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.