தற்பொழுது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சுஷாந்த் சிங்கின் மரணம். இவருடைய மரணம் மர்மமாக இருந்து வருகிறது எனவே திரை உலகிலும் மற்றும் மக்கள் மத்தியிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.இவருடைய பிரேத பரிசோதனையில் தூக்குக் கயிற்றால் கழுத்தில் இறுகியதால் மூச்சுத்திணறி உயர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இவருடைய உறவினர்கள் இது குறித்து வழக்கு நடத்த வேண்டும் என முடிவு வந்தனர்.
அந்த வகையில் தற்பொழுது வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா பீகார் மாநில முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் சல்மான் கான் உட்பட 7 நடிகர்களின் மீது வழக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சல்மான் கான் சுஷாந்த் சிங் நடிக்கவிருக்கும் 7 படங்களில் நடிக்காமல் போனதில் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்து வந்தார் இதனையடுத்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. இதற்கு காரணம் சல்மான் கான்,கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர்
உட்பட இன்னும் சில நடிகர்களின் மீது 306 109 உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வழக்கறிஞர் சுதிர குமார் ஓஜா தெரிவித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இயக்குனர் அபினவ் சிங்க் கஷ்யப் சல்மான்கானின் குடும்பத்தினர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.இதனைத்தொடர்ந்து சுஷாந்த் சிங் மரணத்திற்கு பாலிவுட் நடிகர்கள் பலர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவே மக்கள் மத்தியில் சற்று சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என கூறத்தான் வேண்டும். இவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தைக் குறித்து தகவல்கள் வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகும் நாம் அனைவரும் காத்திருப்போம்.