ராக்கெட்ரி படம் வெற்றியா.. தோல்வியா.. தானாகவே முன்வந்து சொன்ன நடிகர் மாதவன்.!

madhavan

நடிகர் மாதவன் 90 கால கட்டங்களில் இருந்து  சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் இதுவரை  பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் இருப்பினும்  சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் அல்லாடி கொண்டிருக்கிறார் காரணம் இவர் பல மொழிகளில்  நடித்து ஓடிக்கொண்டே இருந்ததால்  எந்த ஒரு மொழியிலும் மாதவன் நிலைத்து நிற்கவில்லை.

நடிகர் மாதவன் தமிழ், ஹிந்தி,  கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் தான் இவருக்கு அதிகம் வாய்ப்புகளும் கிடைத்தது அதிக ஹிட் படங்களையும் தமிழில் தான் கொடுத்திருக்கிறார் அந்த வகையில் நடிகர் மாதவன் மின்னலே, ரன், தம்பி, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, ஆயுத எழுத்து,  அலைபாயுதே, ஜேஜே, டும் டும் டும்  என பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

இப்படி ஓடிக்கொண்டு இருந்த மாதவன்  ஒரு கட்டத்தில் இயக்குனர் ஆசையும் வந்துவிட்டது இதனால் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் மாறி மாறி பயணித்துக் கொண்டிருக்கிறார் அண்மையில் கூட நம்பி நாராயணனின் என்னும் ஒரு விஞ்ஞானியின் உண்மை கதையை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கினார்.

இதற்காக பெருமளவு செலவு செய்தார் மாதவன் படம் ஒரு வழியாக வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையில் பெற்று வெற்றி பெற்றது இருப்பினும்  இவருக்கு பெருமளவு பணம் வரவில்லை இதனால் இவர் எனது வீட்டை விற்று விட்டார் என பல்வேறு செய்திகள் வெளி வந்தன. இது குறித்து மாதவன் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.

madhavan
madhavan

அட என்னப்பா நான் தியாகம் செய்ததாக மிகைப்படுத்தாதீர்கள் படத்திற்காக நான் எனது வீட்டை எதையும் இழக்கவில்லை உண்மையில் ராக்கெட்ரியில் ஈடுபட்டுள்ள அனைவரும் இந்த ஆண்டு அதிகமான வரி செலுத்துவார்கள் கடவுளின் அருளால் நாங்கள் அனைவரும் மிகவும் நல்ல மற்றும் பெரும்பாலும் லாபம் ஈட்டினோம் நான் இன்னும்  அனுபவித்து வாழ்ந்து வருகிறேன் என தெரிவித்தார்.