ஜெயிக்கிற குதிரை மேல் பந்தயம் கட்டுகிறாரா ரஜினி.? புகைப்படத்தை பார்த்த விமர்சிக்கும் ரசிகர்கள்

rajini
rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கோமாளி இந்த படம் ஒரு புது முயற்சி என்பதால் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

கோமாளி திரைப்படம் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் அது மட்டுமல்லாமல் பிரதீப் அவர்கள் இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார் ஆம் லவ் டுடே திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

குறிப்பாக லவ் டுடே திரைப்படம் 2கே கிட்ஸ் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக லவ் டுடே திரைப்படம் முதல் நாளில் ஆறு கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் லவ் டுடே திரைப்படம் 8 நாட்களில் 50 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லவ் டுடே திரைப்படத்தை பார்த்த தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இப்படத்தின் இயக்குனர் நடிகரான பிரதீப் ரங்கநாதனை அழைத்து வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். இதை சற்று எதிர் பார்க்காத பிரதீப் ரங்கநாதன் அவரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அது மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவையும் போட்டு உள்ளார்.

அதாவது இதற்கு மேல நான் என்ன கேட்க போகிறேன் சூரியனுக்கும் அருகில் இருப்பது போல இதமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவருடைய சிரிப்பு அவருடைய ஸ்டைல் என்ன ஒரு ஆச்சரியமான மனிதர் நீங்கள் கூறியதை ஒரு நாளும் மறக்க மாட்டேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி மீது ரசிகர்கள் கருத்துக்களும் தெரிவித்து வருகின்றனர் அதாவது ரஜினி அவர்கள் எந்த இயக்குனர்கள் வெற்றி பெறுகிறார்களோ அந்த இயக்குனர்களை அழைத்து பாராட்டுவது போல அவர்களை தன்னுடைய அடுத்த படத்தை இயக்க சொல்லிவிடுகிறாராம். அப்படி டாக்டர் படம் வெற்றி பெற்றதும் அந்த படத்தின் இயக்குனர் நெல்சனை அழைத்து பாராட்டினார் அதேபோல் தற்போது லவ் டுடே படத்தின் இயக்குனரையும் பாராட்டுயுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.