ரஜினியின் ஜெயிலர் படத்தில் “பிரியங்கா மோகன்” நடிக்கிறாரா.? இல்லையா.? அவரே கொடுத்த விளக்கம்..!

rajini-
rajini-

மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களில் நடித்து வருவதால் அவரது மார்க்கெட் அதிகரித்துள்ளது மேலும் இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளமும் இருந்து வருகிறது பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டான், டாக்டர் ஆகிய படங்களில் கைகோர்த்து நடித்தார்.

இந்த இரண்டு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி அசத்தியது. இதனை தொடர்ந்து சூர்யாவுடன் கைகோர்த்து அவர் நடித்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவள் அந்த படமும் விமர்சன ரீதியாக அடித்து நொறுக்கியது. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த பிரியங்கா அருள் மோகன் அடுத்தடுத்து உச்ச நட்சத்திர நடிகர்களுடன் கைகோர்த்துள்ளார்.

அந்த வகையில் ஜெயம் ரவியின் ஒரு புதிய படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இதுபோக நெல்சன் ரஜினியுடன் கைகோர்த்து நடித்து வரும் திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது ஆனால் அது உண்மையா என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருந்தனர்.

இந்த நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் யார்ட்லி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிப்பதாக வரும் தகவல்கள் உண்மையா இல்லையா என கேட்டுள்ளனர்.

அதற்கு முதல் முறையாக வாய் திறந்த நடிகை பிரியங்கா அருள் மோகன் சொன்னது ஜெயிலர் படத்தில் நான் நடிப்பதாக பரவும் தகவல்கள் எதுவுமே உண்மை இல்லை.. மேலும் நான் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தின் மீதும் எனக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாக கூறி உள்ளார்.