தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு புதிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வரும் பிரபலங்களில் ஒருவர்தான் பிரதீப் ரங்கநாதன் இவர் ஜெயம் ரவி அவர்களை வைத்து கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார் அந்த முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அதனை தொடர்ந்து பார்த்தால் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி தானே நடித்த திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து இவருக்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் வசூல் மட்டும் பல கோடியை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறதாம் அந்த வகையில் தற்பொழுது கூட இவர் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம் அதில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிதுன் இயக்கத்தில் தான் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்று ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க போவதாகவும் இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்து கொடுக்கப் போகிறார் எனவும் இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ஒரு சில ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதன் மிகவும் நல்ல நடிகர் அவருக்கு மட்டும் இந்த திரைப்படம் ஒழுங்காக அமைந்தால் அவரும் மிகப்பெரிய நடிகனாக வலம் வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறி இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.