சினிமா உலகில் ஒரு படம் ஹிட் அடிக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாடல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன குறிப்பாக டாப் ஹீரோக்களின் படங்களில் பாடல்கள் ஹிட் அடித்தாலே அந்த படம் ஓடிவிடும்.. அந்த அளவிற்கு பாடலுக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பாடகர்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவராக மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருப்பவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் முதலில் மலையாளத்தில் பல படங்களுக்கு பாடலைப் பாடி இருக்கிறார் தமிழில் 2014 ஆம் ஆண்டு குக்கூ படத்திற்கு kodayila என்ற பாடலை பாடி அறிமுகமானார் அதனை தொடர்ந்து வைக்கம் விஜயலட்சுமி..
என்னமோ ஏதோ, காடு, வெள்ளக்கார துரை, ரோமியோ ஜூலியட், கனா, ஜெய் பீம் என சொல்லிக் கொண்டே போகலாம்.. அந்த அளவிற்கு பல படங்களில் பாடலை பாடி வெற்றி கண்டவர் இப்படி சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த இவர் 2014 ஆம் ஆண்டு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் அனுப்பை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகள் மட்டுமே..
அதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அண்மையில் வைக்கம் விஜயலட்சுமி தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. தன்னுடைய திருமண வாழ்க்கை கண்ணீர் மல்க இருந்ததாக கூறினார் மேலும் பேசிய அவர் என்னுடைய பாடல்களை கணவர் விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா கேரியருக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறினார்.
அதேசமயம் தன்னை பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரிக்க முயற்சியும் செய்தார். என்னுடைய கணவர் ஒரு ஸ்டடிஸ்ட் போல நடந்து கொண்டார். மனதில் ஓரளவுக்குத்தான் வலியை தாங்க முடியும் ஒரு கட்டத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானது என கூறினார்.