nayanthara : நயன்தாரா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார். இதனால் அவருடைய மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது நயன்தாரா கைவசம் ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75 என பல படங்கள் வைத்திருக்கிறார்.
இதில் முதலாவதாக ஜவான் படம் வெளிவர இருக்கிறது அதனை தொடர்ந்து நயன்தாரா அன்னபூரணி என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் எல்லாம் வெளியான நிலையில் அன்னபூரணி தலைப்பில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி வருவதால் அந்த படத்திற்கு பூரணி என தலைப்பு வைக்க இருக்கின்றனர்.
அதில் நயன்தாரா நடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில் முதல் கட்ட சூட்டிங் திருச்சியில் நடத்த படகுழு திட்டமிட்டு இருந்தது உடனே நயன்தாரா அவுட்டோர் ஷூட்டிங் என்றால் நான் வரமாட்டேன். முடிந்த அளவு சென்னையிலேயே ஷூட்டிங் நடத்த பாருங்கள் என கூறியுள்ளார் காரணம் இனி தனது இரண்டு குழந்தைகளுடன் இருக்க சென்னை விட்டு வெளியே வர மாட்டேன் என கூறி இருக்கிறார்..
அதனால் முடிந்த அளவு சென்னையிலேயே சூட்டிங் எடுங்கள் அப்படி ஒருவேளை அவுட்டோர் ஷூட்டிங் வேண்டுமென்றால் டூப் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார் ஆனால் படத்திற்கு மட்டும் சுமார் 10 அல்லது 12 கோடி சம்பளம் மட்டும் கேட்கிறாராம்.
இதனால் படகுழு கோடிக்கணக்கில் உங்களுக்கு காசை அள்ளிக் கொடுத்துவிட்டு நாங்கள் என்ன தலையில் துண்டு போறதா என புலம்பி கொண்டிருக்கிறதாம்.. நயன்தாராவின் இந்த முடிவு இந்த படகுழுவையும் தாண்டி அடுத்தடுத்த படத்தில் நயன்தாராவை புக் பண்ணி இருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாக தகவல்கள் வெளி வருகின்றன.