தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் முதலில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து பின் இயக்குனராக அவதாரம் எடுத்தார் முதலில் நயந்தாரா ஆரியாவை வைத்து ராஜா ராணி என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார்.
அதனை தொடர்ந்து இவர் விஜய் உடன் கைகோர்த்து தெறி, பிகில், மெர்சல் என அடுத்தடுத்த பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்ததால் இவருடைய மார்க்கெட் அதிகரித்தது. தற்பொழுது தமிழில் படம் பண்ணாமல் ஹிந்தி பக்கம் தாவி பாலிவுட் பாஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.
ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது இதனால் ஜவான் படம் நயன்தாராவுக்கு மிகப்பெரிய ஒரு படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை..
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பை மற்றும் பல்வேறு இடங்களில் விருவிருப்பாக போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக பாலிவுட்டில் நடிப்பதால் அவருடைய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதன்படி ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா சுமார் எட்டு கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம்.
தென்னிந்திய சினிமா நடிகை ஒருவர் 8 கோடி சம்பளம் வாங்குவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுதீ போல பரவி வருகிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த செய்தியை வைரல் ஆக்கி வருகின்றனர்.