முரளியின் அம்மா இப்படிதான் இறந்தாரா.? பதற வைக்கும் வீடியோ.

 பிற மாநிலத்திலிருந்து தமிழ் சினிமாவில் கால் தடம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மிக குறைவு அந்த வகையில் 80 ,90 காலங்களிலேயே தமிழ் சினிமாவில் தனது கால் தடத்தைப் பதித்த அவர் முரளி இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முரளி அவர்கள் இதுவரையிலும் தமிழில் 70க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதுமட்டுமல்லாமல் அத்தகைய படங்களில் மூலம் மற்ற நடிகர் நடிகைகளுக்கு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். அந்த வகையில் இவர் இதயம், புது வசந்தம், இரணியன், பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு சமுத்திரம் ஆனந்தம் போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கு என ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் மேலும் பல முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் இவர் 2010 ஆம் ஆண்டு தனது மகன் அதர்வாவுடன் இணைந்து பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது.

மேலும் அதே ஆண்டில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர் ஆரம்பத்தில் பல தடைகளையும் தாண்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக ஊடகம் ஒன்றிருக்கு  தனது தாய் இறந்தது பற்றி கூறி உள்ளார் அந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது அதில் அவர் கூறியது.நான் முதலில் சினிமாவில் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை ஆனால் அதில் நடிக்க எனக்கு உறுதுணையாக இருந்தவர் எனது தாய்தான். என் தாய் தான் என் தந்தையிடம் என்னை வைத்து படம் எடுக்க சொன்னார்.

எந்த ஒரு காலகட்டத்திலும் நான் எவ்வளவு சோகமாக இருந்தாலும் எனக்கு ஆறுதலாகவும் துணையாகவும் பக்கபலமாகவும் நின்றவர் என் தாய் அவர் தற்போது இல்லைஅவர் 1991 ல் இறந்துவிட்டார். தீபாவளி அன்று எனது அக்கா கீழே பட்டாசு வெடித்துக் கொண்டே இருந்தார் பால்கனியில் எனது அம்மா அதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கே விளக்குகள் வைக்கப்பட்டு இருந்தது.

என் அம்மாவின் புடவை நெருப்பில் பற்றி விட்டது என் அம்மா பயத்தில் பின்னே போகாமல் அதற்க்கு  பதிலாக முன்னாடி போய் பால்கனியில் இருந்து தவறி விழுந்தார்.அவர்கள் விழுந்த இடத்திலேயே இறந்து விட்டார். இது ஒரு விபத்து என கூறி மற்றவர்களை கண் கலங்க வைத்தார் முரளி.