சமீப காலமாக சினிமா உலகில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற பலரும் நடிகன்னாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். அந்த ரோலும் அவர்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. அப்படி அண்மையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள லவ் டுடே திரைப்படம்..
அதிரிபுதிரி ஹிட் அடித்தது. அவரைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், கே எஸ் ரவிக்குமார் போன்றவர்களும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இவர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளவர்தான் மிஸ்கின் இவர் இயக்குனராக பல சிறந்த படங்களை கொடுத்துள்ளார்.
இவரது கதை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும் அதனால் இவரது கதைக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது கூட விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பூர்ணா போன்றவர்களை வைத்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கினார் இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது இன்னும் தெரியவில்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மிஸ்கின் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆம் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படமான லியோ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் லியோ படத்திற்காக மிஷ்கின் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி மிஸ்கினுக்கு இந்த படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும்படியானால் அடுத்தடுத்த படங்களுக்கு இவரது சம்பளம் உயரும் என்பதில் மாற்றம் இல்லை..