மங்காத்தா 2 உருவாகிறதா.? அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்.

AJITH

நடிகர் அஜித்குமார் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இன்னொரு ஹிட் படத்தை கொடுக்க எச். வினோத் உடன் மீண்டும் கைகோர்த்து  61வது திரைப்படமான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக நடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இது இப்படி இருக்க மறுபக்கம் அஜித் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. இப்போ நடிகர் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது. அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 2011 ஆம் ஆண்டு அஜித்குமார். நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் மங்காத்தா.

இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் சூப்பராக நடித்திருப்பார். அவருடன் கைகோர்த்து அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி, திரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.  24 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்தது. இந்த படம் வெளியாகி 11 வருடங்கள் ஆன நிலையில் இப்பொழுதும் அஜித்

ரசிகர்களுக்கு பிடித்த ஃபேவரைட் திரைப்படம் மங்காத்தா இருந்து வருகிறது இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பல தடவை சொல்லி வந்தார் ஆனால் அதற்கான அறிவிப்பு மட்டும் வெளிவரவில்லை..

இந்த நிலையில் அஜித் மற்றும் அர்ஜுன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் மங்காத்தா 2 வெகு விரைவில் உருவாகப் போகிறதா என கேள்வி கேட்டு வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

AJITH AND ARJUN
AJITH AND ARJUN
AJITH AND ARJUN