நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரதிப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
லவ் திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் நடிகராகவும் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை விரும்பி பார்த்தார்கள்.
இதனைத் தொடர்ந்து 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 90 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் ஓடிடி தளத்தில் மட்டுமே லவ் டுடே திரைப்படம் 5 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளதாக சினிமா பிரபலம் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார் அப்போது அவர் தமிழகத்தில் வெளியிட்ட சில படங்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து வந்த உதயநிதி லவ் டுடே திரைப்படத்தை பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த உதயநிதி லவ் டுடே திரைப்படம் வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அதுமட்டுமல்லாமல் ஒரு புதுமுக இயக்குனர் இப்படி நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தில் அருமையாக நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 5 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல கலெக்ஷன் பெற்றது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ஊடக பேட்டியில் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.