நயன்தாராவின் அடுத்த படத்தில் இணையும் சாக்லேட் பாய்..! யாருன்னு தெரிஞ்சா ஷாக்காவீங்க..

naynathara
naynathara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி ஆனார். பின் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ் போன்றவர்களுடன் நடித்து எனது மார்க்கத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து  தொடர்ந்து சினிமாவில் வெற்றி கண்டு ஓடிய இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி உறவினர்கள், சினிமா பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும்..

இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இந்த ஜோடி சினிமாவுக்கு என ஒரு நேரத்தை ஒதுக்கிவிட்டு மீதி நேரங்களில் இருவரும் சேர்ந்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். இவர்கள் இருவருக்கும் தற்போது இரு குழந்தைகள் இருக்கின்றனர் குழந்தை வந்த நேரம் இன்னமும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கியுள்ளது.

தற்பொழுது நயன்தாரா ஜவான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்க மறுப்பக்கம் வாய்ப்புகள் குவிக்கின்றன ஆம் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நயன்தாரா ஹீரோயின்னாக நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு மாஸ் படமாக உருவாகிறதாம் இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து மாதவன், சித்தார்த்  போன்றவர்களும் நடிக்க இருக்கின்றனர்.

அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்க வரும் என கூறப்படுகிறது. கல்யாணத்திற்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தான் வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதால் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.