தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு சிறப்பு விருந்து வைத்துள்ள புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் தமிழ், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் மிகவும் சிறப்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது மேலும் ஓணம் பண்டிகை கொண்டாடிய ஏராளமான நடிகைகள் அவர்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்கள் அந்த வகையில் தற்பொழுது கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய குடும்பத்தினர்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடாமல் நடிகரும், அரசியல்வாதியூமான உதயநிதியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.
மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் உதயநிதி உடன் இணைந்து மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்களைத் தொடர்ந்து வைகைப்புயல் வடிவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படப்பிடிப்பிற்கு இடையே நடிகை கீர்த்தி சுரேஷ் உதயநிதி, மாரி செல்வராஜ் மற்றும் வைகை புயல் வடிவேலு உள்ளிட்ட அனைவருக்கும் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு விருந்து வைத்துள்ளார்.
இது குறித்து விருந்து வைத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தலைநிறைய மல்லிகை பூவுடன் அழகில் ஜொலிக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.