சினிமாவுலகில் கேங்ஸ்டர் படங்களுக்கு எப்போதும் நல்லதொரு வரவேற்பு உண்டு அந்த வகையில் சமீப ஆண்டுகளாக கேங்க்ஸ்டர் படங்களில் சிறப்பாக எடுத்து வெற்றி கண்டு வருபவர் கார்த்திக் சுப்புராஜ்.
அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா, பேட்ட, தற்பொழுது ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.
இதைதொடர்ந்து அதுபோன்ற ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படத்தை தான் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் அதுவும் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை எடுக்க உள்ளதால் இந்த படத்திற்கான வரவேற்பு தற்போது தீயாய் பரவி வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் முக்கியமான நடிகர்கள் படங்களில் தனது மனைவியை நடிக்க வைத்து அழகு பார்க்கிறார்.
கார்த்திக் சுப்புராஜின் மனைவி இதுவரை மூன்று திரைப்படங்களில் நடிக்க வைத்து உள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் இறைவி, ரஜினியின் பேட்ட தற்போது வெளியாகி உள்ள தனுஷின் ஜகமே தந்திரம் ஆகிய மூன்று திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருகின்ற படங்களிலும் இவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜின் மனைவி சத்ய பிரேமா தற்பொழுது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருவதால் இவரை பற்றி பேசியும் வருகின்றனர். இதுவரை மூன்று படங்களில் நடித்து உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்துள்ளது.
அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.