நாயகன் படத்தில் கமலின் சாயல்.. இந்த அரசியல் பிரபலத்தின் பிரதிபலிப்பா.?

kamal haasan
kamal haasan

Kamal : திரையுலகில் இன்று மிகப்பெரிய நடிகராக வருபவர் கமல் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும் அதே போல கதாபாத்திரங்களும் வித்தியாசமாக ஏற்று நடிக்க கூடியவர் அதனாலேயே இவரது படங்கள் அனைத்தும் வெற்றியை பெறுகின்றன.

விக்ரம் படத்திற்கு பிறகு கமல் இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து  கல்கி, ஹச். வினோத்துடன் ஒரு படமும் பண்ண திட்டமிட்டு இருக்கிறார். கமலின் பெரும்பாலான படங்கள் காலங்கள் கடந்த பிறகும் பேசுவது கொண்டு அப்படி நாயகன் திரைப்படம் வெளியாகி 175வது நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

அந்த படம் இப்பவும் பேசப்படுகிறது ஏனென்றால் கதைகளும் விறுவிறுப்பாக இருக்கும் கமலும் அந்த படத்தில் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் நாயகன் படம் குறித்து எம்.எஸ். பாஸ்கர் பேட்டியில் பேசியது வைரலாகி வருகிறது அதாவது..

இந்த படத்தை பார்த்த பொழுது கமலிடம் நீங்கள் யார் செயலில் நடித்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாக தெரிகிறது என சொல்லி இருந்தாராம். அப்பொழுது நடிகர் கமல் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம் என கேட்டிருந்தாராம். அதற்கு எம் எஸ் பாஸ்கர் கூறியது பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களுடைய உடை நடை பாவணையை அனைத்தும் முன்னிறுத்தி தான்..

நீங்கள் நடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் நடிப்பை பார்த்ததும் எனக்கு புரிந்து விட்டது என கூறி இருக்கிறார். இதைக் கேட்ட கமல் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கூறி அதிர்ந்து போனாராம். நடிகர் எம் எஸ் பாஸ்கரை  தவிர வேறு யாருமே இந்த விஷயத்தை கண்டுபிடிக்கவில்லை..