Kamal : சிவாஜிக்கு பிறகு நடிப்பு அரக்கன் என பலராலும் கொண்டாடப்பட்டவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹிரோவாக வெற்றி கண்டு வருகிறார். கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஹிட் அடித்தது.
அடுத்து இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கல்கி, THUG LIFE, லோகேஷ் கனகராஜ் உடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் ஒரு படம் பண்ணவும் கமல் ரெடியாக இருக்கிறார் இதனால் அடுத்த 3,4 வருஷத்துக்கு கமல் பிஸியான ஹீரோவாக பார்க்கப்படுகிறார் இவர் இதுவரை 230 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் இப்படிப்பட்ட கமலின் 25, 50, 75, 100 வது படங்கள் ஹிட் அடித்ததா.? படத்தின் பெயர் என்ன என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
ராதிகா கேட்ட கேள்வி ஆடி போன பழனிச்சாமி.. பாக்கியா சொன்ன பதில்.. பாக்கியலட்சுமி பரபரப்பான எபிசோட்..
கமலின் 25 வது படம் : தங்கத்திலே வைரம் 1975 ஆம் ஆண்டு சொர்ணம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் சிவக்குமார், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா, வி கே ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.
கமலின் 50 வது திரைப்படம் : மோகம் முப்பது வருஷம் 1976 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜெயலட்சுமி, சுமித்ரா, விஜயகுமார், ஸ்ரீபிரியா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
புறநானூறு படத்தில் சூர்யா ரோல் இதுவா.? அடுத்த சம்பவத்துக்கு ரெடியான சுதா கொங்கரா
கமலின் 75 வது படம் : நிழல் நிஜமாகிறது 1978 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் கமலஹாசன், சுமித்ரா, ஷோபா, சரத்பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.
கமலின் 100 வது படம் : ராஜபார்வை 1981 ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் கமல், மாதவி, ஒய் ஜி மகேந்திரன், எல்வி பிரசாந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர் இந்த படம் எதை நோக்கி நகரும் என்றால் இந்து இளைஞனுக்கும், பணக்கார கிறிஸ்துவ பெண்ணிற்கும் ஏற்படும் காதல் அதன் பிறகு இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை போன்றவற்றை இந்த படம் விவரித்து சொல்லும் படம் நன்றாக இருந்தாலும் விமர்சன ரீதியாக சரியாக ஓடவில்லை.