வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறாரா கமல்?… கையில் டார்ச் லைட்டுடன் உலா வரும் மகள் அக்‌ஷரா ஹாசனால் குழப்பம்.

kamal hassan

தற்போது சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமானவர் தான் கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன். இவர் தற்போது தெலுங்கு,தமிழ்,  மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க தற்பொழுது தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக நாம் அனைவரும் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து கட்சிகளும் மிகவும் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் தற்ப்பொழுது சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் அரசியலில் களம் இறங்கியுள்ளார்கள். அந்த வகையில் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை ஆரம்பித்துள்ளார். கடந்த வருடம் தேர்தலில் ஓரளவிற்கு வாக்குகள் கிடைத்ததால் இந்த வருடமும் சட்டமன்றத் தேர்தலில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் 234 தொகுதிகளிலும் போட்டி போட உள்ளார். ஐஜேகே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சியும் உள்ளது. எனவே கமலஹாசனுடன் இணைந்து அவருடைய அண்ணன் மகள் மற்றும் நடிகை சுகாசினி உள்ளிட்டோர் கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேமிக்கிறார்கள்.

sukashni
sukashni

இவர்களைத் தொடர்ந்து பிரபல நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் உட்பட இன்னும் பல நடிகர், நடிகைகள் தீவிரமாக பிரச்சாரம் ஈடுப்பட்டு வருகிறார்கள். எனவே ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது. கமலஹாசன் முக்கியமாக  நாங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலில் ஈடுபட வில்லை.எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேறு வழி உள்ளது எனவே உங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் நான் அரசியலில் ஈடுபடுகிறேன் என்று கூறியுள்ளார்.

kamal 3
kamal 3

இவ்வாறு கூறி உள்ள இவர் பிரச்சாரத்தின் பொழுது தனது மகளுடன் வந்துள்ளார். அந்தவகையில் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா கையில் லைட் பிடித்துக் கொண்டு தனது அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்தது வாரிசு அரசியலை அறிமுகப்படுத்த உள்ளாரா? அக்ஷராவை தொடர்ந்து அடுத்ததாக ஸ்ருதிஹாசனையும் நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறி வந்தார்கள்.

KAMAL 1
KAMAL 1

இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மையத்தின் தொண்டர் ஒருவர் கமலஹாசனின் காலில் ஏற்கனவே சர்ஜரி செய்து இருந்தது நாம் அனைவருக்கும் தெரியும் மீண்டும் அந்த இடத்தில் அடிபட்டு உள்ளது அப்பாவை கவனித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அக்ஷரா கமல்ஹாசன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் கால் வலி தாங்கமுடியாமல் கமலஹாசன் ஒத்த காலைத் தூக்கிக் கொண்டு மற்றொரு காலால் நிற்கிறார்.

KAMAL 2
KAMAL 2