தெலுங்கு ஹீரோ படத்தில் வில்லனாக நடிக்கிறாரா கமல்.? இயக்குனர் யார் தெரியுமா..

kamal-
kamal-

நடிப்புக்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக பல்வேறு அப்டேட்களை கொடுத்து அசத்தி வருகிறது படக்குழு . அதை வைத்து பார்த்தால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. அதோடுமட்டும்மில்லாமல் நடிகர் கமலஹாசன் அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார்.

என்பது குறித்தும் அதேபோல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து எந்த இயக்குனருடன் இணைவார் குறித்தும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமல் அடுத்ததாக பல்வேறு படங்களில் நடிக்கிறார் இந்தியன் 2, விக்ரம் 3 என அடுத்தடுத்த பாகங்கள் உருவாக இருக்கிறதாம்.

இது மட்டுமல்லாமல் தொடர்ந்து டாப் இயக்குனர்கள் பலரும் நடிகர் கமலை வைத்து படங்களை இயக்க ஆசைப்படுகின்றனர் அப்படி அண்மையில் எஸ் எஸ் ராஜமௌலி நடிகர் கமலுக்கு ஒரு கதையை கூறி உள்ளதாக கூறப்படுகிறது அதனை தொடர்ந்து இப்பொழுது  கேஜிஎஃப் படத்தை எடுத்து அசத்திய இளம் இயக்குனர் பிரசாந்த் நில் அடுத்தடுத்த டாப் நடிகர்களுக்கு கதை சொல்லி வந்தார்.

இந்த நிலையில்  பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிகர் கமல் வில்லனாக நடிக்க போகிறார் என்ற தகவல் வெளி வந்த வண்ணமே இருக்கிறது இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது.